‘மைத்திரி ஆட்சியிலும் மைக்றோ பிஸ்டலா”: த.தே.கூ. பாரிய ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மண்டூர் கிராமத்தில் கடந்த வாரம் அம்பாறை சமூக சேவை அதிகாரியான எஸ்.மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கொலையாளியை கைது செய்யுமாறும் கோரியும் மட்டக்களப்பு நகரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம், கண்டன பேரணி என்பன இடம்பெற்றன.
மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவிற்கு முன்பாக மணிக்கூட்டு கோபுர சந்தியில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுன்ற உறுப்பினர்களான பி.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண அமைச்சர் ரி.துரைராஜசிங்கம் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
‘மைத்திரி ஆட்சியிலும் மைக்றோ பிஸ்டலா, நல்லாட்சியிலும் குண்டர்களா’ உட்பட பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply