சர்சைக்குரிய பொத்துவில் விஹாரையை ஜனாதிபதி இன்று திறந்து வைப்பார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொத்துவிலுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன் போது ஜலால்தீன் சதுக்கத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட முகுது மகா விஹாரையை ஜனாதிபதி திறந்து வைப்பார். பெரும் சர்ச்சைக்கு மத்தியில் முஸ்லிம் பிரதேசத்தில் சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்விஹாரைக்கான அடிக்கல்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே, பாராளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்ன, அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொத்துவில் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply