ராஜி­த­வுக்கு பிர­தமர் ஆசை வந்­து­விட்­ட­து : வாசு­தேவ நாண­யக்­கார

பிர­தமர் பத­விக்கு ராஜித ஆசைப்­ப­டு­கின்றார். அத­னா­லேயே அமைச்­ச­ர­வை­யிலும் பொய் சொல்கின்றார் என வாசு­தேவ நாண­யக்­கார தெரிவித்துள்ளார். மஹிந்த ஆத­ரவுக் கூட்­டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மஹிந்­தவை மீண்­டும் ஆட்­சிக்கு கொண்­டு­வர சகல வகை­யி­லான முயற்­சி­க­ளையும் எடுப்போம். மஹிந்­தவை பிர­த­ம­ராக்­கு­வதே ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்­னணியின் தீர்­மா­ன­மாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒன்­றி­ணைத்து கட்­சியை முன்­னெ­டுத்து செல்­வது அமைச்சர் ராஜித போன்ற ஒரு சில­ருக்கு பிடிக்­க­வில்லை. கட்­சியில் இருக்கும் முக்­கிய இரு­வ­ரான மஹிந்த மற்றும் ஜனா­தி­பதி மைதி­ரியை பிரித்து கட்­சியை பிள­வு­ப­டுத்­தவே இவர்கள் முயற்­சிக்­கின்­றனர்.

அமைச்­ச­ர­வையின் செய்­தி­யாளர் சந்­திப்பில் ராஜித சேனா­ரத்ன பொய் கூறி­விட்டார். அவ­ரது கருத்­துக்கள் மக்­களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்­ளது.

அமைச்சர் ராஜித அடுத்த பிர­த­ம­ருக்­கான கனவு காண ஆரம்­பித்­து­விட்டார். அதி­கா­ரத்தை கைப்­பற்றி ஆட்சி நடத்த வேண்டும் என்ற ஆசை அவருக்கும் வந்­து­விட்­டது என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply