புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருகிறது
2009 ஆம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிbழ விடுதலைப் புலிகள் தோற்கடிக் கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிbழ விடுதலைப் புலிகளினால் இலங் கையில் எவ்வித தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.
இருப்பினும் இந்தி யாவிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 13 தமிbழ விடுதலைப் புலி ஆத ரவாளர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply