பொருளாதாரத்தை சீரமைக்க ஐரோப்பிய யூனியனிடம் கிரீஸ் உறுதி
சரிந்த பொருளாதாரத்தை சீரமைக்க ஐரோப்பிய யூனியனிடம் கிரீஸ் புதிய திட்டம் தாக்கல் செய்துள்ளது. அதில் வரியை உயர்த்த ஒப்புக் கொண்டுள்ளது. பொருளாதாரம் சரிந்து கடன் சுமையில் கிரீஸ் சிக்கி கிடக்கிறது. பன்னாட்டு நிதியத்திடம் கடன் பெற்று ஐரோப்பிய நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறிவிட்டது. எனவே, சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள கடன் கொடுத்த ஐரோப்பிய நாடுகள் நிபந்தனைகள் விதித்தன.அது குறித்து நடந்த பொதுவாக்கெடுப்பில் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர். இதனால் கிரீஸ்நாட்டுக்கு மேலும் சிக்கல் அதிகமானது.
இந்த நிலையில் சிக்கன நடவடிக்கை தொடர்பாக புதிய திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஐரோப்பிய கூட்டமைப்பு கிரீசிடம் வலியுறுத்தியது. வருகிற 13–ந் தேதி வரை இறுதி கெடு விதித்து இருந்தது.
இந்த நிலையில் கிரீஸ் ஐரோப்பிய கூட்டமைப்பிடம் சிக்கன நடவடிக்கை தொடர்பாக புதிய திட்ட அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.
வரி விதிப்பை பலவிதமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மற்றும் ஷிப்பிங் கம்பெனிக்கு புதிய வரி உயர்வு அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு தலைவர் டொனால்டு டஸ்க் இதை உறுதி செய்தார். ஆனால் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
கிரீஸ் அளித்துள்ள அறிக்கை கடன் கொடுத்த நாடுகளின் கருத்துக்கு ஏற்ப இருந்தால் பிரச்சினைக்கு சுமூக தீர்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். கிரீஸ் புதிய திட்ட அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து நேற்று ஐரோப்பிய சந்தைகள் ஏற்றம் கண்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply