புதிய கடன்மீட்புத் திட்டம் குறித்து கிரேக்கப் பிரதமர் கட்சியுடன் ஆலோசனை
கிரேக்கம் மூன்றாவது கட்ட நிதிமீட்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக தமது கடன் வழங்குனர்களுக்கு நேற்று இரவு பின்னேரம் அனுப்பிய சீர்திருத்த பரிந்துரைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக பிரதமர் அலெக்ஸிஸ் ஸிப்ராஸ் தனது சிரிஸா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். இதற்கு அடுத்தகட்டமாக, தமது நிதி மீட்புத் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவர் பெற முயல்வார். சர்வதேசக் கடன் வழங்குனர்களுடனான தனது பேச்சுவார்த்தைகளுக்கு இந்த பரிந்துரைகளை அவர் அடிப்படையாகக் கொள்ளவிருக்கிறார்.இவரது பரிந்துரைகளில் கடந்த ஞாயிறன்று நடந்த வாக்கெடுப்பில் கிரேக்க மக்கள் நிராகரித்த அரசாங்க சிக்கன செயல்முறைகளும் அடங்குகின்றன.
ஸிப்ராஸ், சுமார் 60 பில்லியன் டாலர்கள் நிதியுதவி கேட்பதாகவும், கிரேக்கத்தின் மிகப்பெரிய கடன் சுமையை குறைக்கும் வகையிலான கடன்மறுசீரமைப்பு தேவை என்று கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply