காணாமல் போன டோர்னியர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு: ஐ.ஜி. சர்மா தகவல்
தமிழ்நாட்டில் கண்காணிப்புப் பணியின்போது, காணாமல் போன இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானத்தின் தகவல் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ரோந்துப் பணியில் ஈடுபட்டிருத்த அந்த விமானம் கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று காணாமல் போனது. அன்று இரவு 9.23 நிமிடத்திற்கு இறுதியாக இந்த விமானம் திருச்சி வமான நிலையத்தோடு தொடர்பில் இருந்தது. அதற்குப் பிறகு இந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இரண்டு விமானிகள் உட்பட மூன்று பேர் பயணம் செய்த அந்த விமானத்தைத் தேடும் பணி கடந்த 32 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இருநாட்களுக்கு முன்பாக விமானத்திலிருந்து வெளியாகும் சமிக்ஞையும் நின்றுபோனதால், விமானத்தை தேடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டதாகக் கருதப்பட்டது.
பல நவீன வழிமுறைகளை கையாண்டும் விமானத்தை கண்டு பிடிக்க முடியாமல் போனதால், விமானம் கடத்தப்பட்டிருக்குமோ போன்ற சந்தேகங்களும் எழுந்தன. இருந்தபோதும் பல்வேறு தனியார் நிறுவங்களின் உதவியுடநஅ கடலோர காவல் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், தற்போது விமானத்தின் தகவல்பெட்டி கண்டறியப்பட்டுள்ளது.
சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 950 மீட்டர் ஆழத்தில் கண்டுக்கப்பட்ட இந்த விமானத்தின் பாகங்கள், ஆய்வுக்காக சென்னை கொண்டு வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் சிதம்பரத்திற்குக் கிழக்கே 16 கி.மீட்டர் தூரத்தில் 9,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது காணமல்போனதாக கடலோரக் காவல்படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி. ஷர்மா முன்னதாக தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த விமானம் அதே குறிப்பிட்ட பகுதிக்கு அருகே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply