ரஷ்யா விமானத்தின் கறுப்புப் பெட்டிகள் கண்டுபிடிப்பு 

09எகிப்து, சினாயில் விபத்துக்குள்ளான ரஷ்யா விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அவற்றில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடலை ஆய்வு செய்த பின்னர், அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியதா? என்ற விபரம் தெரியவரும் துறைசார் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எகிப்து, சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் நேற்று புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

 

இந்தநிலையில் எகிப்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தாங்கள் தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply