இலங்கை சிறையில் வாடும் 126 தமிழக மீனவர்களை தீபாவளிக்கு முன் விடுவிக்க நடவடிக்கை: தமிழக அரசு தீவிர முயற்சி

meenavarஎல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 126 தமிழக மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் வாடுகிறார்கள். அவர்களுடைய 47 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் உள்ள துறைமுகங்களில் பராமரிப்பில்லாத நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று செப்டம்பர் மாதம் 22, 25, 30 ஆகிய தேதிகளிலும், கடந்த அக்டோபர் மாதம் 2, 11, 13, 14 ஆகிய தேதிகளிலும் மீண்டும் கடந்த 1-ந்தேதியும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

மீனவர்கள் விடுதலை மட்டுமல்லாமல், கச்சத்தீவை மீட்பதும், தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொடுக்க ரூ.1,520 கோடி விசேஷ நிதி உதவியாக அளிக்க வேண்டும் என்பதும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

 

இந்த நிலையில் மீனவர்கள் அனைவரையும் தீபாவளிக்கு முன்பு விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு, மத்திய அரசாங்கத்தை தொடர்பு கொண்டு வருகிறது.

 

தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன், மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார் ஆகியோர், தினமும் மத்திய அரசாங்க வெளிவிவகாரத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு முதல்-அமைச்சர் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

 

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சியால், தீபாவளிக்கு முன்பு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் எப்படியும் விடுதலை செய்யப்பட்டு விடுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கை தமிழக கடலோர மீனவர்களிடம் உள்ளது.

 

ஆனால் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், படகுகள் மீட்கப்படவில்லை என்றால், இலங்கை துறைமுகங்களில் பராமரிப்பின்றி இருக்கும் படகுகள் பழுதடைந்துவிடும் என்பது மீனவர்களின் கவலையாக உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply