65 ஆண்டுகளில் முதல் முறையாக சீனா-தைவான் அதிபர்கள் சந்திப்பு

f90dea90-e73f-4b10-9735-f4f9d3945fbe_S_secvpfசீனா- தைவான் நாடுகளின் அதிபர்கள் 65 ஆண்டுகளில் முதல் முறையாக சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சொகுசு ஓட்டலில் நடந்தது. சீனாவில் நடந்து வந்த உள்நாட்டுப்போர் 1949-ம் ஆண்டு முடிந்த பின்னர், சீனாவும், தைவானும் பரம எதிரிகளாகி விட்டன. இவ்விருநாடுகளின் தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேசியதே இல்லை. சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி தைவான் என்று சீனா கருதுகிறது.இந்த நிலையில் 65 ஆண்டுகளில் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங்கும், தைவான் அதிபர் மா யிங் ஜியோவும் சந்தித்து பேசுவது

என முடிவானது. இந்த சந்திப்பை நடுநிலையான இடமான சிங்கப்பூரில் நடத்துவது எனவும் தீர்மானித்தனர்.

 

அதன்படி சிங்கப்பூரில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் ஜின்பிங்கும், மா யிங் ஜியோவும் நேற்று சந்தித்தனர். இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க சந்திப்பை காண்பதற்காக நிருபர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களது முன்னிலையில் இரு தலைவர்களும் கை குலுக்கிக்கொண்டனர். புன்னகையுடன் அவர்கள் காணப்பட்டனர்.

 

ஜின்பிங் சீன கம்யூனிஸ்டு கட்சியினை குறிக்கிற வகையில் சிவப்பு நிற ‘டை’யும், மா யிங் ஜியோ தேசியவாத கட்சியின் நிறமான நீலநிற ‘டை’யும், அணிந்திருந்தனர்.நிருபர்கள் முன்னிலையில் தோன்றிய பின்னர், இரு தலைவர்களும் தனி அறையில் சந்தித்து பேசினர். முதலில் பேசத் தொடங்கிய

 

ஜின்பிங், “தைவான் ஜலசந்தியின் இரு புற மக்களும் தங்களது சொந்த விவகாரங்களை தாங்களே தீர்த்துக்கொள்ளுகிற ஆற்றலையும்,விவேகத்தையும் பெற்றிருக்கின்றனர்” என கூறினார்.

 

மேலும், “நாம் ஒரே குடும்பம். நம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது” என உறுதிபட தெரிவித்தார்.

 

அதற்கு பதில் அளித்த தைவான் அதிபர் மா யிங் ஜியோ, “தைவான் ஜலசந்திக்கு அப்பால் அமைதியை மேம்படுத்துவதில் நான்

 

உறுதியாக இருக்கிறேன். நமது உறவுகள் முழு ஈடுபாட்டுடனும், விவேகத்துடனும், பொறுமையுடனும் அமைந்திடவேண்டும்” என

 

கூறினார்.

 

அத்துடன் தைவானின் ஜனநாயகத்தை சீனா மதிக்க வேண்டும் என்று மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டினார். அப்போது அவர்,

 

“பரஸ்பரம் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்” என குறிப்பிட்டார். தொடர்ந்து அவர்கள் பேச்சு நடத்தினர்.

 

தைவானில் விரைவில் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply