பாரிஸ் தாக்குதல்கள் பெல்ஜியத்தில் 7 பேர் கைது
பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை ஏழு பேரை கைது செய்துள்ளதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் கொல்லப்பட்ட இரண்டு தாக்குதலாளிகள் பிரசல்ஸிலிருந்து வந்த பிரெஞ்சு பிரஜைகள் என அரச வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.முன்னதாக இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டது என நம்பப்படும் இரண்டாவது வாகனம் ஒன்றை பிரெஞ்ச் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
நகரின் கிழகேயுள்ள புறநகர் பகுதி ஒன்றில், கைவிடப்பட்ட நிலையில் இருந்த கறுப்பு நிற சியட் வாகனத்தில் கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள் இருந்தன எனக் கூறப்படுகிறது. இதைவைத்து பார்க்கும்போது, தாக்குதல்களை நடத்தியவர்களில் பலர் இன்னும் வெளியே உலவிக் கொண்டிருக்கின்றனர் என்பதாக கருத முடியும் என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply