பெருவெள்ளம் ; மூவர் பலி; 81,000 பேர் பாதிப்பு; இடம்பெயர்ந்தோர் 79 முகாம்களில் தஞ்சம்

vellakkadu_003தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 22 ஆயிரத்து 162 குடும்பங்களைச் சேர்ந்த 80 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார். இம் மழை வெள்ளம் காரணமாக மூவர் உயிரிழந்து ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் அவர் கூறினார். இம் மழை வெள்ளம் காரணமாக 2837 குடும்ப ங்களை சேர்ந்த 9768 பேர் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து 79 முகாம் களில் தங்கியுள்ளனர் எனவும் அவர் கூறினார். இதேவேளை 67 வீடுகள் முழுமையாகவும் 1162 வீடுகள் பகுதியளவிலும் இம்மழை, வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளன எனவும் அவர் கூறினார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மழை, வெள்ளம் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் இருவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.

 

இம்மழை வெள்ளம் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறி யுள்ள மக்கள் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு உடனடி நிவாரணம் வழங்கப்படுகின்றன.

 

யாழ் மாவட்டத்தில் 1033 குடும்பங்க ளைச் சேர்ந்த 3856 பேரு 24 நலன்புரி நிலையங்களிலும்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 393 குடும்பங்களைச் சேர்ந்த 1088 பேர் 16 நலன்புரி நிலையங்களிலும், மன்னார் மாவட்டத்தில் 324 குடும்பங்களைச் சேர்ந்த 1275 பேர் 14 நலன்புரி நிலையங்களிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 820 குடும்பங்களைச் சேர்ந்த 2683 பேர் 13 நலன்புரி நிலையங்களிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 242 குடும்பங்களைச் சேர்ந்த 763 பேர் 04 நலன்புரி நிலையங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் 04 நலன்புரி நிலையங்களிலும், திருகோணமலை மாவட்டத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 285 பேர் 03 நலன்புரி நிலையங்களிலும் என்றபடி தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இதேவேளை இம் மழை, வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 1897 குடும்பங்களைச் சேர்ந்த 5693 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 1958 குடும்பங் களைச் சேர்ந்த 6287 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 1946 குடும்பங்களைச் சேர்ந்த 8000 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1947 குடும்பங்களைச் சேர்ந்த 8094 பேரும், யாழ். மாவட்டத்தில் 9051 குடும்பங்களைச் சேர்ந்த 34115 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 4656 குடும்பங்களைச் சேர்ந்த 16450 பேரும், திருமலை மாவட்டத்தில் 2395 குடும்பங்களைச் சேர்ந்த 9046 பேரும், மன்னார் மாவட்டத்தில் 349 குடும்பங்க ளைச் சேர்ந்த 1367 பேரும், மட்டு. மாவட்டத்தில் 165 குடும்பங்களைச் சேர்ந்த 535 பேரும், வவுனியா மாவட்டத்தில் 213 குடும்பங்களைச் சேர்ந்த 727 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 84 குடும்பங்களைச் சேர்ந்த 258 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply