மூன்று ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்

mahintha-desapiriya-8994d1-720x480தேர்தல்கள் ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு ஆகிய மூன்று குழுக்களுக்குமே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக தற்போதைய தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நலீன் அபேசேகர மற்றும் ரத்னஜீவன் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக பெயரிடப் பட்டுள்ளனர். அத்துடன் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக டீ. கனகரத்தினமும் அதன் உறுப்பினர்களாக பேராசிரியர் ஹிஸ்புல்லா, டாக்டர் அனில டயஸ் மற்றும் பண்டாரநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி ஆணைக்குழு வின் தலைவராக யூ. பலிகக்கார தெரிவு செய்யப் பட்டுள்ளதோடு, ஏனைய உறுப்பினர்களாக வீ. கணகசபாபதி, எம். எம். ஷபுல்லா, அர்ஜுன மகேந்திரன்,. டாக்டர் ஆர். எச். எஸ். சமரதுங்க ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

 

மேலும் தேசிய கொள்வனவு சபைக்கு ஏ. எம். பொன்சேகா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் 10 பேரை உள்ளடக்கிய அரசியலமைப்பு சபையினால் தேர்தல்கள், பொதுச் சேவை, பொலிஸ், கணக்காய்வு, மனித உரிமைகள், நிதி, எல்லை நிர்ணயம், இலஞ்சம் மற்றும் ஊழல், தேசிய கொள்வனவு ஆகிய 09 சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply