பாரீஸ் தாக்குதலில் பலியான 30 பேர் உடல்கள் அடையாளம் தெரியவில்லை: பிரான்ஸ் பிரதமர்

france preministerபாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதில் 129 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களின் உடல்கள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 103 பேரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டு ஒப்படைக்கப்பட்டு விட்டது. இன்னும் 20 முதல் 30 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை. அவர்களை கண்டறியும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்காக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தேவையான உதவிகளை பெறலாம். இந்த தகவலை பிரான்ஸ் பிரதமர் மானுவல் வால்ஸ் தெரிவித்தார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நிருபர்களிடம் அவர் கூறும் போது, ‘‘இறந்தவர்கள் யாரும் இல்லாத அனாதைகள் அல்ல. அவர்கள் இரவு நேரத்தில் ஓட்டலில் அமைதியான முறையில் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டனர்.

மனோதத்துவ நிபுணரோ, டாக்டரோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பை சேர்ந்தவர்கள் என யாரும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முடியாது. ஆனால் நாங்கள் அவர்களுக்கு உதவி செய்வோம். அவர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் அரசின் அனைத்து துறை நிர்வாகங்களும் துணை இருக்கும்’’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply