பிரதமர் இன்று சுவிட்சர்லாந்து விஜயம்
சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்த விஜயத்தில் பிரதமருடன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க , சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் சுவிட்சஸர்லாந்து செல்கின்றனர்.குறித்த மாநாடு எதிர்வரும் 20 முதல் 23 ஆம் திகதி வரையில் சுவிஸர்லாந்தில் நடைபெறவுள்ளது.சர்வதேச பொருளாதார மாநாட்டிற்கு வரலாற்றில் முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply