அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு புதிய நீதிபதியை தேர்ந்தெடுக்க ஒபாமா தீவிரம்: இந்தியருக்கு அதிக வாய்ப்பு

obamaஅமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மூன்று இந்தியர்களில் ஒருவரை அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்வு செய்வார் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர்களில் ஒருவரான ஆன்டனின் ஸ்கேலியா, கடந்த வாரம் திடீரென மரணம் அடைந்தார்.அவரது மறைவால் காலியாகியுள்ள ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி பணி இடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி ஒபாமா தொடங்கினார். இது தொடர்பாக அவர் தனது குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு தமிழரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் (48) நியமிக்கப்படலாம் என முன்னர் தகவல் வெளியானது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக மேலும் இரு இந்தியர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள், நியால் கட்யால் மற்றும் கமலா ஹாரிஸ் ஆவார்கள். இவர்களில் நியால் கட்யால்(45), அமெரிக்காவின் தற்காலிக சொலிசிட்டர் ஜெனரல் பதவி வகித்தவர்.

கமலா ஹாரிஸ்(51), கலிபோர்னியாவில் அட்டார்னி ஜெனரலாக உள்ளார். அங்கிருந்து செனட் சபைக்கு போட்டியிட தீவிரமாக உள்ளார். இவர் சென்னையை பூர்வீகமாக கொண்டவராவார்.

இவர்கள் இருவரும் ஒபாமாவுக்கு நெருக்கமானவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே, இந்த 3 இந்தியர்களில் ஒருவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகும் வாய்ப்பு கிடைக்கலாம். அப்படி நியமிக்கப்பட்டால் அந்நாட்டு சட்டத்தின்படி தங்கள் ஆயுள்காலம் வரை அவர்கள் அந்தப் பதவியில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply