முட்டுக்கட்டையாக இருப்பவர்களையே தீக்குளிக்கச் செய்வேன்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 250
0 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படாவிட்டால் தான் தீக்குளிக்கப் போவதில்லையென்றும், முட்டுக்கட்டையாக இருப்பவர்களை இம்முறை தீக்குளிக்கச் செய்யவிருப்பதாகவும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். தமிழ் முற்போக்குக் கூட்டணி நேற்று கொழும்பில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நீங்கள் ஏற்கனவே ஒருமுறை தீக்குளிப்பதற்காகபெற்றோல் கலனுடன் பாராளுமன்றம் சென்றிருந்தீர்கள். தற்பொழுது ஆரம்பித்திருக்கும் 2500 இடைக்கால சம்பளம் வழங்கவேண்டுமென்ற கோரிக்கைக்கு கம்பனிகள் உடன்படாவிட்டால் மீண்டும் தீக்குளிப்பீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அவர், ‘நான் தீக்குளிக்க மாட்டேன். யார் யார் இதனை வாங்கிக்கொடுக்க முட்டுக்கட்டையாக இருக்கின்றார்களோ அவர்களைத் தீக்குளிக்க வைப்பேன்’ என்றார்.
கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கு 14 நாட்கள் கம்பனிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலத்துக்குள் இதனை நிறைவேற்றவிட்டால் அடுத்து தாம் முன்னெடுக்கும் நடவடிக்கை கசப்பானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் கொடுக்கச் சொல்லும் கொடுப்பனவை அதாவது நாளொன்றுக்கு 100 ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் மறுக்கின்றன. இது அவர்களின் மனித உரிமைகைளை மீறும் செயற்படாகும். இக்கொடுப்பனவை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்வது தொடர்பில் சந்தேகம் காணப்படுகிறது.
யாரே இதனைக் குழப்புவதற்காக புறோக்கர் வேலை செய்வதாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழங்கப்பட்டிருக்கும் 14 நாள் அவகாசத்துக்குள் தோட்டக் கம்பனிகள் இந்தக் கொடுப்பனவை வழங்காவிட்டால் கசப்பான முடிவுகளை எடுக்க நேரிடும் என்றும் வடிவேல் சுரேஷ் எம்பி எச்சரித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply