தேர்தல் ஆணைக்குழுவை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த திட்டம்!
தேர்தல் ஆணைக்குழுவை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த கூட்டு எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை உரிய திகதிகளில் நடத்தாமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 31ம் திகதியுடன் ஆறு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்ட 31 உள்ளுராட்சி மன்றங்களினதும் பதவிக் காலம் பூர்த்தியாகின்றது.
இதன்படி, நாட்டின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களினதும் பதவிக் காலம் முடிவடையவுள்ளது.உள்ளுராட்சி மன்ற பொறிமுறைம முற்று முழுதாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், உடனடியாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி சிரேஸ்ட தலைவர் ஒருவர் சிங்கள வார இறுதிப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், எதிர்வரும் 31ம் திகதி முதல் தேர்தல் நடத்தப்படும் வரையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எதிராக தொடர்ச்சியாக உபவாசம் மேற்கொள்ளப்பட உள்ளது.
உள்ளுராட்சி மன்றப் பொறிமுறைமை செயலிழந்தமையே அண்மையில் வெள்ள நிவாரணங்களை உரிய முறையில் வழங்க முடியாமைக்கான காரணமாகும். கடந்த காலங்களில் இலங்கையின் ஜனநாயகம் பற்றி முதலைக் கண்ணீர் வடித்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை தொடர்ச்சியாக காலம் தாழ்த்தி வருவது குறித்து குரல் கொடுக்கவில்லை.
இதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதுடன் இது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உப தலைவராக செயற்படும் உலக ஜனநாயக அமைப்பிற்கும் இது குறித்து முறைப்பாடு செய்யப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply