இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறல்; ஏழு தமிழக மீனவர்கள் கைது
தலைமன்னாருக்கு வடமேல் பகுதியில் இலங்கை கடற் பரப்பிற்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் சென்ற விசைப்படகும் இதன்போது சிறைப்பிடிக்கப்பட்டது.மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை அடுத்து, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தமிழகச்செய்திகள் தெரிவிக்கையில்:கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் விரட்டி அடித்ததாகவும் இதனால், மீன்பிடிக்க முடியாமல், பல படகுகள் நேற்றே கரை திரும்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேசு இருதயராஜ் என்பவருக்குச் சொந்தமான படகு, பாக் ஜலசந்திக்கும் – மன்னார் வளைகுடா பகுதிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகையும், மீனவர்களையும் சுற்றி வளைத்து சிறைபிடித்துள்ளனனர்.
மீனவர்கள் 7 பேரும் இலங்கையின் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply