செக்ஸ் குற்றவாளிகள் போக்கிமான் – கோ விளையாட வருகிறது தடை

pokemone goபாலியல் குற்றவாளிகள் பரோலில் இருக்குபோது போக்கிமான் – கோ விளையாட்டை விளையாடுவதை அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் தடை செய்யவுள்ளது. மிகவும் பிரபலமான இந்த இணையதள விளையாட்டை விளையாடுகின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மாகாண ஆளுநர் ஆன்ரூ குவோமோ தெரிவித்திருக்கிறார்.

 

 

 

இந்த விளையாட்டை விளையாடும் குழந்தைகள், உண்மையான உலகில் சுற்றிதிரிவதன் மூலம், தங்களுடைய செல்பேசிகளில் மெய்நிகர் கதாபாத்திரங்களை தேடுகின்றனர்.

 

 

இந்த தடை அறிவிக்கப்பட்டால், நியூயார்க்கில் தற்போது பரோலில் இருக்கின்ற ஏறக்குறைய மூவாயிரம் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகள் இதனை பதிவிறக்கம் செய்வது அல்லது பெரிய அளவில் விளையாடப்படும் இந்த மெய்நிகர் விளையாட்டுக்களை விளையாடுவதை இந்த நடவடிக்கை தடுக்கும்.

 

இந்த செல்பேசி விளையாட்டு செயலியை இத்தகைய குற்றவாளிகள் பயன்படுத்துவதிலிருந்து தடைசெய்யும் தொழில்நுட்ப ஆதரவை இந்த மென்பொருளை வடிமைத்துள்ள நியான்டிக் நிறுவனத்திடம் ஆளுநர் குவோமோ எழுதி கேட்டுள்ளார்.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply