ஐ,எஸ் அச்சம் காரணமாக டுபாயில் இருந்து வந்த குடும்பம் திருப்பி அனுப்பப்பட்டனர்
போலி கடவூச்சீட்டு மூலம் இன்று அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய தாய், தந்தை மற்றும் சிறிய பிள்ளை ஒன்றும் மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தாய் மற்றும் பிள்ளைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவூச்சீட்டு இருந்துள்ளதுடன், தந்தைக்கு ஜேர்மன நாட்டு கடவூச்சீட்டு இருந்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து அகதி கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு ஆதரவானவர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுப்பதற்க்காக கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமையால் இது தொடர்பாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் வழங்கியதாகவும், இறுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரின் உத்தரவுப்படி அவர்களை நாடு கடத்தியதாகவும் உதவி கட்டுப்பாட்டாளர் எம்.ஜி.எச் காரியவசம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply