சென்னை விமானம் மாயமானதில் 29 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை: பாராளுமன்றத்தில் மந்திரி அறிவிப்பு
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த மாதம் அந்தமான தலைநகர் போர்ட் பிளேயருக்கு ஏ.என்.32 ரக விமானப்படை விமானம் புறப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வங்ககடல் மீது பறந்து கொண்டிருந்த போது திடீர் என்று மாயமானது.அந்த விமானத்தில் விமானப்படை வீரர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என மொத்தம் 29 பேர் இருந்தனர். அந்த விமானம் பழுதாகி கடலுக்குள் விழுந்து இருக்கலாம் என்று கருதி விமானப்படை விமானங்களும் கடற்படை கப்பல்களும், நீர் மூழ்கி கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபட்டன. ஆனால் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
விமானம் கடலுக்கு அடியில் பாய்ந்து இருந்தால் அதை கண்டு பிடிப்பது சிரமம் என்று கடல்சார் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மாயமான விமானம் தொடர்பான அறிவிப்பை பாராளுமன்றத்தில் ராணுவ இணை மந்திரி அபாஷ் ராமராவ் பாம்ரே இன்று வெளியிட்டார் அதில் மாயமான விமானத்தில் இருந்த 29 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply