சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்திடம் இருந்து முக்கிய நகரம் மீட்பு
சிரியாவில் துருக்கி எல்லைக்கு அருகே மான்பிஜ் நகர் உள்ளது. இந்த முக்கிய நகரை ஐ.எஸ். இயக்கத்தினர் தங்கள் பிடியில் வைத்திருந்தனர்.அங்கு அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் சிரியா படைகள், ஐ.எஸ். இயக்கத்தினருடன் கடுமையாக சண்டையிட்டு வந்தன. இந்த நிலையில், மான்பிஜ் நகரை முழுமையாக மீட்டு விட்டதாக சிரியா படைகள் அறிவித்துள்ளன.அங்கு ஐ.எஸ். இயக்கத்தினரால் சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த அப்பாவி பொதுமக்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சிரியா படைகள் பத்திரமாக விடுவித்தன.இப்போது மான்பிஜ் நகரம் முழுக்க முழுக்க சிரியாவின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply