கவிஞர் நா.முத்துக்குமார் காலமானார்!
கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ”ஆனந்த யாழை மீட்டுகிறாய், அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்” பாடலுக்காக தேசிய விருது பெற்றார். 7ஜி ரெயின்போ காலணி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்பட ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் திரைப்பாடல்கள் 1500ஐ தாண்டும். சில படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். தொடக்கத்தில் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு), ஆணா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply