கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, பிறந்த நாள் விழாவில் மக்கள் முன் தோன்றினார்
கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் வயோதிகத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் கடந்த 2008–ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வருகிறார். பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றுவதில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். இதற்காக ஹவானா நகரம் விழாக்கோலம் பூண்டது. மக்கள் வீதிகளில் ஆடிப்பாடி, தங்கள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடினர்.அங்குள்ள அரங்கம் ஒன்றில் நடந்த கோலாகல விழாவில் பிடல் காஸ்ட்ரோ கலந்து கொண்டு, முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
அவருடன் அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவும், வெனிசூலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அமர்ந்திருந்தனர்.தனது பிறந்த நாளில் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் அளித்து கவுரவித்த மக்களுக்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.பிறந்த நாள் செய்தியில் பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை விமர்சித்துள்ளார். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா அணுக்குண்டு வீசி பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்த ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு கடந்த மே மாதம் சென்றிருந்தபோது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மன்னிப்பு கேட்காததை அவர் சாடி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply