சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டு ராஜபக்சேயின் மகன் கைது

namalசட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டில், ராஜபக்சேயின் மகன் கைது செய்யப்பட்டார். இலங்கை அதிபராக 10 ஆண்டு காலம் பதவி வகித்தவர் ராஜபக்சே. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இவர் தோல்வி அடைந்தார். சிறிசேனா அதிபர் ஆனார். அதையடுத்து, ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பத்தினர் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவருக்கு நெருக்கடிகள் எழுந்தன. அதன்படி, அவரும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

 

ராஜபக்சேயின் மூத்த மகன் நாமல் ராஜபக்சே மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை குற்றச்சாட்டும் இவற்றில் அடங்கும். அவர் இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததில் நடந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை பற்றி நிதி குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர்.

 

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நாமல் ராஜபக்சேயை நிதி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அவருடைய வக்கீல் பிரேமநாத் டோலவட்டா தெரிவித்தார்.

 

 

 

நாமல் கைது செய்யப்படுவது, இது இரண்டாவது முறை ஆகும். கடந்த மாதம் அவர் ரூ.4,225 கோடி அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் நடைபெற்ற நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டார். 7 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

 

நேற்று அவர் கைது செய்யப்பட்டது குறித்து அவரோ அல்லது அவருடைய குடும்பத்தினரோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ராஜபக்சேயின் தம்பியும், நாமல் ராஜபக்சேயின் சித்தப்பாவுமான பசில் ராஜபக்சே, 3 தடவை கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply