மலேசிய பெண்ணுக்கு ஜிகா தொற்று இருப்பது உறுதி
கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள சிங்கப்பூருக்கு, அண்மையில் சென்ற மலேசிய பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாக மலேசியா உறுதி செய்துள்ளது.ஜிகா வைரஸ் தொற்றினால் 50 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத் துறை அமைச்சகம் முன்பு உறுதி செய்திருந்தது.
தங்கள் நாடுகளில் உள்ள கர்ப்பிணி பெண்கள் சிங்கப்பூருக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆஸ்திரேலியா, தாய்வான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
கருவில் இருக்கும் குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்க காரணமாக இந்த ஜிகா வைரஸ் காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply