கட்சி நிகழ்வில் பங்கேற்காது மஹிந்த தப்பிச் செல்வது வருத்தமளிக்கின்றது : துமிந்த திஸாநாயக்க

mahindaகட்சி நிகழ்வில் பங்கேற்காது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தப்பிச் செல்வது வருத்தமளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 65 ஆண்டுகள் பூர்த்தியாகும் இந்த தருவாயில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்காது, மஹிந்த வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வது கவலையளிக்கின்றது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செயற்பாட்டை இட்டு வெட்கப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.கட்சியை நேசிக்கும் உண்மையான கட்சியின் உறுப்பினர்கள் எனவும் கட்சியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை விட்டுக் கொடுத்துவிட்டு வெளிநாட்டு விஜயம் மேற்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் நிலையில் மஹிந்த ராஜபக்ஸவை மெய்யான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக கருதப்பட முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply