அரசியல்வாதிகளை பாதுகாப்பதல்ல பொலிஸாரின் கடமை:ஜனாதிபதி
பொலிஸ்துறை என்பது அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகளை பாதுகாக்கும் நிறுவனம் அல்லவென குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த காலங்களில் இவ்வாறான நிலையே காணப்பட்டதென குறிப்பிட்டார். இலங்கை பொலிஸின் 150ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற பிரதான நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. சில பொலிஸார் அரசியல்வாதிகளுடன் நெருங்கி செயற்படுவதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொதுமக்களுக்காக முன்னின்று செயற்பட வேண்டுமென்றே நான் எண்ணுகின்றேன். பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் நீதியை பாதுகாப்பது பொலிஸாரின் முக்கிய பொறுப்பாகும். சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு அப்பால் சென்று மனிதநேயமிக்க செயற்பாடாக நான் அதனை கருதுகின்றேன்.
150 வருட கீர்த்திமிக்க இந்த பயணம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் இலங்கை பிரஜை என்ற ரீதியில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். வீதியில் 10 அல்லது 12 மணித்தியாலங்கள் நீரின்றி, உணவின்றி தமக்கான பாதுகாப்பின்றி கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்களுக்கு தனிப்பட்ட ரீதியில் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply