சீனாவில் பெற்றோர் கொலையை மறைக்க 17 பேரை கொன்ற மகன்

chinaசீனாவில் பெற்றோர் கொலையை மறைக்க 17 பேரை மகன் கொன்றார்.சீனாவில் தென் மேற்கில் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் பகுதியை சேர்ந்தவர் யங்குயிங்பே (20), இவர் தனது குடும்பத்தினருடன் சொந்த கிராமத்துக்கு சென்று இருந்தார்.அப்போது அவருக்கும், பெற்றோருக்கும் இடையே பண பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த யங்குயிங்பே தாக்கியதில் தாயும், தந்தையும் மரணம் அடைந்து விட்டனர்.

எனவே, அக்கொலையை மூடி மறைக்க அவர் முயற்சி செய்தார். அதன் எதிரொலியாக மேலும் 17 பேரை கொலை செய்தார். அவர்களில் 6 பேர் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள்.

இதற்கிடையே இக்கொலைகள் பற்றி துப்பு துலக்கிய போலீசார் யங்குயிங்பேயை கைது செய்தனர். தான் செய்த கொலை குறித்து அவர் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply