பிரபாகரன் காலத்தில் வடக்கில் ஒழுக்கம் பேணப்பட்டது : இராஜாங்க அமைச்சர் விஜயகலா

viyakalaதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் ஒழுக்கம் கடைப்படிக்கப்பட்டதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.அந்த காலப்பகுதியில் அலுவலகங்களில் அல்லது வீடுகளில் பாலியல் துஸ்பிரயோகங்களோ சிறுவர் துஸ்பிரயோகங்களோ, அல்லது கணவன் மனைவி பிரச்சனைகளோ காணப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துகல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறுவர் சிறுமியர் துஸ்பிரயோகம், அவர்களை வேலைக்கு அமர்த்துதல் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களும் தொந்தரவுகளும் தற்போது அதிகரித்துள்ளன. இது போன்ற சம்பவங்களுக்கு நீதிமன்றங்களிலே குறுகிய காலத்தில் விசாரணை நடாத்தி சட்டத்தினூடாக தன்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply