சிவாஜி கணேசன் சிலைக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 89-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிலை பீடத்தின் அடியில் அவரது படம் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்தது.இதற்கு சிவாஜி குடும்பத்தின் சார்பில் அவரது மகன் ராம்குமார், பேரன்கள் விக்ரம்பிரபு, துஷ்யந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இவர்களுடன் ஏராளமானோர் வந்து இருந்தனர்.
காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலைக்கு நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணி வித்தனர். முன்னதாக சென்னை, மயிலாப்பூர், வடக்கு மாட வீதியில் உள்ள முதியோர் இல்லத்திலும், சென்னை சைதாப்பேட்டை வி.ஜி.பி. சாலையில் உள்ள கருணை இல்லத்திலும், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுபோல தமிழகம் முழுவதும் சிவாஜியின் 89-வது பிறந்த நாளையொட்டி நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் சங்கம் சார்பில் பொன்வண்ணன், மனோபாலா, எஸ்.வி. சேகர் மற்றும் நிர்வாகிகள் கடற்கரையில் உள்ள சிவாஜி சிலைக்கும், அன்னை இல்லத்தில் உள்ள அவரது படத்துக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன், டிரெஸ்டி எஸ்.வி.சேகர், செயற்குழு உறுப்பினர் மனோபாலா, பிரகாஷ், உதயா, ஹேமச்சந்திரன், நடிகர் சங்க பொதுமேலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் தலைமையில் சிவாஜி படத் துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இந்த நிகழ்ச்சியில் குமரி அனந்தன், எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், வள்ளல்பெருமான், மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம் மற்றும் கஜநாதன், எஸ்.கே. நவாஸ், சித்ராகிருஷ்ணன், மாம்பலம் ராஜேந்திரன், திருநீர்மலை பாண்டியன், சைதை நவராஜ், சூளை ராஜேந்திரன், குறிஞ்சி பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply