சீனாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி ஆன வாலிபர்

chinaசீனாவின் ஹெபே மாகாணத்தை சேர்ந்தவர் நியேஷுபின் (20). இவர் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக கடந்த 1995-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண் பிணம் சோளக்காட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக நியே ஷுபின் கைது செய்யப்பட்டார். அவர் மீது கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நியே ஷுபின் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே கடந்த 2005-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டார். அவர் தானே கொலை குற்றவாளி என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நியே ஷுபின் நிரபராதி என தீர்ப்பளித்தது. இதனால் அவர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது. அதனால் எந்தவித பயனும் இல்லை. ஏனெனில் நிரபராதியான அவர் ஏற்கனவே சுட்டுக்கொல்லப்பட்டு விட்டாரே? என குடும்பத்தினர் புலம்புகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply