இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய 550 வீரர்கள் கைது

இலங்கை ராணுவம், கப்பற்படை மற்றும் விமான படையில் 2 லட்சத்து 75 ஆயிரம் வீரர்கள் பணிபுரி கின்றனர். இந்த நிலையில் ராணுவத்தில் இருந்து 43 ஆயிரம் பேர் தப்பி ஓடி விட்டனர்.அவர்கள் மனம்மாறி கடந்த டிசம்பருக்குள் மீண்டும் ராணுவ பணியில் சேர்ந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

ஆனால் பலர் மீண்டும் ராணுவத்தில் சேரவில்லை. அதை தொடர்ந்து அவர்களை கைது செய்யும் பணி தொடங்கப்பட்டது. அந்த வகையில் ஒரே நாளில் 550 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுமான பணி, போக்குவரத்து பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். பலர் துப்பாக்கியுடன் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையில் 29 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மற்றும் ராணுவம் இடையே உள்நாட்டு போர் நடந்தது. அதில் 1 லட்சம் பொதுமக்களும், 23 ஆயிரம் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

தற்போது இலங்கையில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் பல ராணுவ வீரர்கள் பணியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ராணுவத்தில் சம்பளம் குறைவாக வழங்கப்படுவதை காரணம் காட்டி தனியார் நிறுவனங்களில் பணிபுரிய பலர் ஓட்டம் பிடித்து வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply