இலங்கை சிறைகளில் இருந்து தமிழக மீனவர்கள் 38 பேர் விடுதலை

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. பின்னர் மாநில அரசு, இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வலியுறுத்துவது, அதற்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கையால் மீனவர்கள் விடுவிக்கப்படுதும் தொடர்கிறது. ஆனால், மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகள் மட்டும் இலங்கை அரசாங்கத்தால் விடுவிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 38 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசின் உத்தரவையடுத்து, யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 30 மீனவர்களும் வவுனியா சிறையில் உள்ள 8 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply