போலந்தில் இந்திய மாணவர் மீது மரண தாக்குதல்: தூதரகத்திடம் அறிக்கை கோரினார் சுஷ்மா சுவராஜ்
போலந்து நாட்டின் பொஸ்னன் நகரில் இந்திய மாணவர் ஒருவர் மீது மரண தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவரின் பெயர் உள்ளிட்ட தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலந்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில், “போலந்து நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திடம் தற்போது தான் பேசினேன். அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா,, “போலந்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்காவில் இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குசிபோட்லா என்பவர் துப்பாக்கியால் நிறவெறி காரணமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply