மஹிந்தவின் மே தினத்தை காலிமுகத்திடலில் நடாத்த ஏற்பாடு செய்க-ரணில் ஆலோசனை

கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டத்தை நடாத்துவதற்கு காலி முகத்திடலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இம்மே தினக் கூட்டத்துக்குத் தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் பிரதமர் அந்த அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சிக்கு காலி முகத்திடலின் முழுப் பகுதியும் தேவைப்பட்டாலும் அதனையும் வழங்குமாறும், அதற்குத் தேவையான பாதுகாப்பு, நீர், மலசலகூட வசதிகள் என்பவற்றை செய்து கொடுக்குமாறும் பிரதமர் அதிகாரிகளுக்கு மேலும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply