கிண்ணியாவில் ஜனாதிபதி திடீர் ஆய்வு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அங்கு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் உட்பட அங்கிருந்த நோயாளிகளை பார்வையிட்டார்.கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பரவியதால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை மாலை கிண்ணியாக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அப்போது கிண்ணியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்டுள்ளார்.
அங்குள்ள நோயாளிகள் அனுபவித்து வருகின்ற குறைபாடுகள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய தேவைகள் தொடர்பாக ஜனாதிபதி மக்களை கேட்டறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிண்ணியா மருத்துவமனையை தரமுயர்த்துமாறு பழைய மருத்துவமனையின் முன்னே கடந்த 5 தினங்களாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளோரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளதாகவும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply