நைஜீரியாவில் 18 சிறுமிகள் உள்பட 22 பேர் கடத்தல்
நைஜீரியாவில் ஒரு குறிப்பிட்ட மத அடிப்படையிலான அரசை அமைப்பதற்காக போகோஹரம் இயக்க பயங்கரவாதிகள் ஆயுதப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் பெண்களை, மாணவிகளை கடத்திக்கொண்டு போவதையும், கல்வி நிறுவனங்களில் தாக்குதல் நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்த நிலையில் கடந்த 30–ந் தேதி அங்கு கேமரூன் நாட்டு எல்லையில் உள்ள புல்கா என்ற கிராமத்திற்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நுழைந்து, அங்கிருந்து 17 வயதுக்குட்பட்ட 14 சிறுமிகளை பிடித்து வேன்களில் கடத்திச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஊருக்கு வெளியே ஓட்டம் பிடித்த 4 சிறுமிகளையும் அவர்கள் பிடித்துக்கொண்டனர்.
இந்த கடத்தல்காரர்கள், போகோஹரம் இயக்க நிறுவனரான முகமது யூசுப்பின் மகன் அபு முசாப்அல் பர்னாவி ஆதரவு பயங்கரவாதிகள் என தகவல்கள் கூறுகின்றன.
மற்றொரு சம்பவத்தில், டும்பா என்ற கிராமத்திற்குள் நுழைந்த போகோஹரம் பயங்கரவாதிகள் அங்கு கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் பணம் தராமல் ஓட்டம் பிடித்தபோது, மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்று, அவரை பிடித்து தாக்கியதுடன் அவரது வீட்டில் இருந்து 4 பெண்களை பிடித்துச் சென்றனர். இவ்விரு சம்பவங்களும் அங்கு பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply