இலங்கையில் புதிய அரசியல் சாசனம்: அரசியலமைப்பு குழுவின் அறிக்கை விரைவில் தாக்கல்

இலங்கையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்க அதிபர் சிறிசேனா தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் தலைமையில், எதிர்க்கட்சித்தலைவர், நீதித்துறை மந்திரி உள்ளிட்டோர் அடங்கிய அரசியலமைப்பு குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட இந்த குழுவினர் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவது தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குழுவின் அடுத்தகட்ட கூட்டம் வருகிற 4 மற்றும் 5–ந்தேதிகளில் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இந்தக்குழு தனது அறிக்கையை விரைவில், குறிப்பாக இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

அதிபர் சிறிசேனா தலைமையில் நடந்த கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறிய அவர், இதற்கு அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண புதிய அரசியல் சாசனத்தில் வழி உருவாக்கப்படும் என தெரிகிறது. எனவே இது தமிழர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply