லண்டனில் மீண்டும் தாக்குதல்! பலர் காயம்
லண்டன் ட்ரவர் பிறிட்ஜ் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று வெள்ளை நிற வான் வந்து, அங்கிருந்த மக்கள் மீது மோதியுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு சிலர் மீது ஏறியும் சென்றதாக கூறப்படுகிறது.இத் தாக்குதலின் போது, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும், இதனால் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசார் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இத் தாக்குதலை அடுத்து அந்த பாலம் மூடப்பட்டுள்ளதாகவும், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மாற்று வழிப்பாதையில் செல்லுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 22-பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply