இயற்கை அனர்த்தம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224ஆக உயர்வு

இயற்கை அனர்த்தத்தால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் பெரும்பாலானவை இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் இன்று மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன், சப்ரகமுவ மாகாணத்தில் அகதி முகாம்களாகப் பயன்படுத்தப்படும் 11 பாடசாலைகள் தவிர்ந்த ஏனையவை இன்று திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, அம்மாகாணத்தின் 14 பாடசாலைகள் நாளை செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் எனவும், அவை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ள 14 பாடசாலைகள் வருமாறு: எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாவெல தமிழ் வித்தியாலயம், வேரகம சுனந்த வித்தியாலயம், பலாவெல ஆரம்ப பாடசாலை, அயகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிங்களகொட,பிம்புர, விதானகம, அயகம தம்மானந்த, பல்லேகட, கலதுர, அயகம ராஹுல ஆகிய பாடசாலைகள், நிவித்திகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரிபத்கல, பாரவத்த தமிழ், பேபொட்டுவ ஆகிய பாடசாலைகள், கலவான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கலவான தமிழ் வித்தியாலயம் என சப்ரகமுவ மாகாண கல்விச் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply