ஜனாதிபதி பங்களாதேஷ் செல்கிறார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் பங்களாதேசுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும், ஜூலை மாதம் நான்கு நாட்கள் பயணமாக டாக்காவுக்கு செல்லவுள்ளார்.ஜூலை 13ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.
அதேவேளை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 5 இலட்சம் டொலர் நிதியுதவியை கொடையாக வழங்குவதாகவும் பங்களாதேஷ் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply