சவூதி அரேபியாவில் ரோந்து வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு – ஒரு வீரர் பலி
சவூதி அரேபியாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ ரோந்து வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் பலியாகினார். சவூதி அரேபியாவின் காதிப் மாகாணத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்கள் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரர் பலியாகினார், இதனையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல் தான் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இம்மாகாணத்தில் ஏற்கனவே அதிகளவில் தீவிரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த வாரத்தில் 4 தீவிரவாதிகளுக்கு அரசு மரண தண்டனையை நிறைவேற்றியது.
மரண தண்டனை சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply