போலி கிரடிட் காட் விவகாரம்: இலங்கையர் உள்ளிட்ட மூவர் கைது

போலி கிரடிட் காட் வர்த்தகத்தில் ஈடுபட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும், கைதுசெய்யப்பட்ட இலங்கையர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், சில ஆண்டுகளுக்கு முன்னர் சட்டவிரோதமாக அவர் இந்தியா சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.அத்துடன், இவருடன் கைதுசெய்யப்பட்ட மற்றைய இருவரும் இந்தியப் பிரஜைகளாகும்.

சந்தேகநபர்கள் வேறு சிலரின் கிரடிட் காட் தகவல்களைப் பெற்று, அவற்றிற்கான போலி காட்களை தயாரித்து, அவற்றை பயன்படுத்தி இணையத்தில் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக இந்தியப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவர்கள் வசம் இருந்து, போலி கிரடிட் காட்கள் 144 கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், போலி கிரடிட் காட்களைப் பயன்படுத்தி, இணையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மூன்று தொலைக்காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இந்திய சைபர் கிரைம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply