நெருப்புடன் விளையாடினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவுடன் மோதல் போக்கை வடகொரியா தொடர்ந்து கடைபிடித்து வருவதாக அந்த எச்சரிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.உலக நாடுகள் இதுவரை கண்டிராத கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும், அதனால் அமெரிக்காவுடன் மோதுவதை அந்த நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் டிரம்ப் அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

ஏவுகணைக்குள் பொருத்தக் கூடிய அளவில் அணுவாயுதம் ஒன்றை வெற்றிகரமாக வடகொரியா தயாரித்ததாக வெளியான தகவலை அடுத்தே, ஜனாதிபதி டிரம்ப் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவின் கயூம் பிராந்தியம் அருகே உள்ள அமெரிக்கா ராணுவத்தின் தளம் மீது அருகே நடுத்தர வகை ஏவுகணை தாக்குதல் நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தென் கொரியா செய்தி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. வடகொரியாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ள ஒரு சில தினங்களில் வடகொரியா தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவல் அங்குள்ள பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படும் என்றால் வடகொரியாவும் வல்லரசு பட்டியலில் இணைந்துள்ளதாகவே கருதப்படும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சரகம் குறித்த தகவலை உன்னிப்புடன் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் இடையே கடும் வார்த்தைப் போர் நடைபெற்று வந்த நிலையில், டிரம்பின் அழுத்தம் திருத்தமான எச்சரிக்கையானது, அமெரிக்கா வடகொரியா இடையேயான மோதல் போக்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய காலகட்டம் நெருங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்கா கொண்டுவந்த கடுமையான பொருளாதார தடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த கிம் ஜோங், வடகொரியா மீது தொடுக்கப்படும் இந்த அழுத்தங்களுக்கு பதிலடியாக ஆயிரம் மடங்கு திருப்பித்தரப்படும் என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply