பறவை மோதியதால் புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் தரையிறங்கிய ஏர் அரேபியா விமா

ஏர் அரேபியா விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு 162 பயணிகளுடன் நேற்று புறப்பட்டது. அதில் 6 விமானப் படை வீரர்களும் இருந்தனர்.  புறப்பட்ட சில நிமிடங்களில் பறவை ஒன்று மோதியதால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. முதற்கட்டமாக திருவனந்தபுரம் விமான நிலையம் தரப்பில் இயந்திர கோளாறு என்று தெரிவிக்கப்பட்டது. 

ஏதோ ஒன்று வேகமாக மோதியதால் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்ட பிறகு சோதனை செய்த பின்னர் தான் பறவை மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டனர். நாளை காலை வேறுஒரு விமானத்தில் செல்ல உள்ளனர்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply