நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை நிதி உதவி

பெய்து வரும் அடை மழையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நேபாள் மக்களுக்கு உதவிகளை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளது.இந்தவகையில், 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலங்கை நேபாளத்துக்கு அனர்த்த உதவியாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நிதி, நேபாள தூதரகத்தின் ஊடாக அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால், மண் சரிவு, வெள்ளம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை, மீளக் கட்டியெழுப்புவதற்கே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply