சரத் பொன்சேகாவை உடன் கைது செய்க : கம்மம்பில

ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச் செயல் புரிந்துள்ளார் என சரத் பொன்சேகா உறுதியாக கூறுகிறார் எனின், கடந்த எட்டு வருடங்களாக யுத்தக் குற்றச் செயல்களை மறைத்த குற்றத்துக்காக அவரை உடன் கைது செய்ய வேண்டும் என தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.குற்றவியல் சட்டத்தில் காணப்படும் இராஜதுரோக குற்றச்சாட்டின் படி அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவை, குற்றவியல் சட்டத்தின் கீழ் தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 13 மாதங்கள் விளக்கமறியலில் வைத்திருக்க முடியுமாயின், ஏன் பொன்சேகாவைக் கைது செய்யாமல் இருக்கின்றார்கள் என்பது புரியாத புதிராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply