தேசிய உணவு உற்பத்தி புரட்சி இன்று ஜனாதிபதி தலைமையில்

தேசிய உணவு உற்பத்தி புரட்சி இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது. இன்று காலை கெக்கிராவ திப்பட்டுவௌ நீர்த்தேக்கத்துக்கு அருகில் ஜனாதிபதி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இன்று முதல் 12ஆம் திகதி வரையான வாரம் உணவு உற்பத்தி புரட்சியின் ஆரம்ப வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் தேசிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

முதல் நாளான இன்று (06) விவசாய தினமாக பெயரிடப்பட்டுள்ளது.

தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய உணவு உற்பத்தி புரட்சி ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply